என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஜிதேந்திர சிங்
நீங்கள் தேடியது "ஜிதேந்திர சிங்"
சி.பி.ஐ.யில் மிகப்பெரிய சீர்திருத்தம் மேற்கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் பதிலளித்தார். #JitendraSingh #CBI
புதுடெல்லி:
சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், அப்போதைய சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன் மோதல் வெடித்தது. இதனால் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. சி.பி.ஐ. வரலாற்றில் முதல் முறையாக நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.
எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்காக சி.பி.ஐ. அமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக மத்திய அரசும் பரிசீலிப்பதாக தகவல் வெளியானது.
ஆனால் இந்த தகவல்களை மத்திய அரசு மறுத்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் அவர், சி.பி.ஐ.யில் மிகப்பெரிய சீர்திருத்தம் மேற்கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறியிருந்தார். #JitendraSingh #CBI

பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் தமிழ்நாடே நிநியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த சிறந்த இடம் என மாநிலங்களவையில் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். #JitendraSingh
புதுடெல்லி :
மத்திய பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜிதேந்திர சிங் மக்களவையில் குறிப்பிட்டுள்ளதாவது:-
நியூட்ரினோ திட்டத்துக்கு தமிழக மக்கள் அபரிமிதமான ஆதரவு தெரிவித்து உள்ளனர். நியூட்ரினோ திட்டம் அமைப்பது தொடர்பாக 2010 ஆம் ஆண்டு பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம், விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
மேலும், இதுகுறித்து தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அமைந்துள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் கலந்துரையாடல் கூட்டம் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றுள்ளது.
நில அதிர்வு, குறைந்த அளவிலான சுற்றுச்சூழல் தாக்கம், புவியியல் குறியீடு ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்ததில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடே சிறந்த இடமாக விளங்குகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார். #JitendraSingh
பயங்கரவாதம் மற்றும் காஷ்மீர் விஷயத்தில் பா.ஜ.க. அரசு எந்தவித சமரசமும் செய்துகொள்ளாது என மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறினார். #KashmirCeasefire #JitendraSingh
ஜம்மு:
மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் ஜம்முவில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பயங்கரவாதம் மற்றும் காஷ்மீர் பிரச்சனைகள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து மத்திய மந்திரி பேசியதாவது:-
காஷ்மீர் விவகாரத்தில் பா.ஜ.க. அரசு மென்மையான போக்கை கடைப்பிடிப்பதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இது துரதிர்ஷ்டவசமானது. வரவிருக்கும் நாட்களில் அது தவறு என உணர்ந்துகொள்வீர்கள். பயங்கரவாதமும், நாட்டின் இறையாண்மை மீதான தாக்குதலும் கவலைக்குரியது. காஷ்மீர் விஷயத்திலும், பயங்கரவாத விஷயத்திலும் அரசு எந்தவிதமான சமரசமும் செய்துகொள்ளாது.
எல்லையில் நிரந்தரமாக சண்டை நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை. ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனை நீட்டிப்பு செய்வது குறித்து பாதுகாப்பு நிறுவனங்களுடன் கலந்து ஆலோசித்த பின்னர் உள்துறை அமைச்சகம் இறுதி முடிவு எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #KashmirIssue #KashmirCeasefire #JitendraSingh

×

X